Home உலகம்ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் 34 காவல்துறையினர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் 34 காவல்துறையினர் பலி

by admin


வடக்கு ஆப்கானிஸ்தானின் பாரக் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 34 காவல்துறையினர்; கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பராக் மாகாணத்தின் பாலபுலுக் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த தலிபான்கள் அங்கிருருந்த சோதனைச் சாவடிகள், மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் 23 காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துமுள்ளனர்.

இதையடுத்து, பராக் நகரில் புகுந்த தலிபான்கள் 11 காவல்துறையினரை சுட்டுக் கொன்றதுடன் அங்கிருந்த அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More