குளோபல் தமிழ் செய்தியாளர்
தமிழகத்திலிருந்து பேராசிரியர் வீ, அரசு அலைமையிலான குழுவொன்று ஈழத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. கொழும்பு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கில் சில சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பேராசிரியர் வீ. அரசு தலைமயிலான குழு இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டது. இதன்போது உரையாற்றிய பேராசிரியர் வீ. அரசு ஈழ மண்ணிற்கும் தனக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழைப்பில் கிளிநொச்சிக்கு வருகை தந்தமையை நினைவுகூரை்ந்த பேராசிரியர் வீ. அரசு அன்று தான் வருகை தந்தபோது இருந்த கிளிநொச்சி இன்று இல்லை என்றும் கடுமையான மாற்றமடைந்த நகரத்தை பார்த்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தமிழிலில் அச்சுப் பதிப்பு முயற்சிகள், சி.வை. தாமோதரம் பிள்ளையின் பங்களிப்பு என்பன குறித்து விவாதிக்கப்பட்டதுடன் கூத்துக் கலை குறித்த ஈழ – தமிழ தொடர்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் தமிழ் ஆசிரியர்கள் தமது ஆளுமை தொடர்பான வீ. அரசின் உரையும் இடம்பெற்றது.