குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிலிப்பைன்ஸில் பிரதம நீதியரசர் மரியா லூர்தஸ் செரினோ ( Maria Lourdes Sereno ) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் முதல் பெண் பிரதம நீதியரசராக கடமையாற்றி வந்த இவருக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் நிலவி வந்தநிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
மரியா லூர்தஸ் செரினோவின் பதவியை ரத்து செய்யுமாறு அரசாங்கம் அந்நாட்டு உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தொடர்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நடத்தியிருந்த வாக்கெடுப்பின் போது மரியா லூர்தஸ் செரினோவை பணி நீக்குவதற்கு ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில்p அவர் பதவிநீக்கப்பட்டுள்ளார்
இதற்கு முன்னதாக பதவி வகித்த பிரதம நீதியரசரும் குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.