178
வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் இவ்வாறு கூறியுள்ளார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விஷால் தனது நேர்காணலில் கூறிய விடயங்கள்.
என்னை நடிகனாக்கியவர் அர்ஜுன் தான்
“துணை இயக்குநராக சினிமா பயணத்தை துவக்கிய என்னை நடிகனாக பார்த்தவர் நடிகர் அர்ஜுன் தான். அதன் பின்னர் தான் செல்லமே படத்தில் நடித்தேன். நான் நடிகனாக அவர் தான். நான் துணை இயக்குநராக பணிபுரியும் போது நான் வாங்கிய முதல் சம்பளம் 100 ரூபாய் தான். படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு முதலில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். ”
பெயர் பெற்றுத் தந்த பாலாவின் `அவன் இவன்’
“தொடர்ந்து கமர்ஷியல் படங்களை மட்டுமே பண்ண கூடாது என்பதால் பாலாவின் `அவன் இவன்’ எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால் தொடர்ந்து பெயருக்காக மட்டுமே படம் பண்ண முடியாது. வித்தியாசமான படங்களை பண்ணவே ஆசைப்படுகிறேன். அடுத்ததாக புதுமுக இயக்குநருடன் இணைகிறேன். அந்த படமும் சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் படம் தான். ”
வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம்
“எனது வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியமானவர்கள். நமது நிறை, குறைகளை எடுத்துச் சொல்வது நண்பர்கள் தான். எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் எனது நண்பர்களை தான் சொல்வேன். அந்த வகையில், வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை 8 வயதில் இருந்தே எனக்கு தெரியும். நாங்கள் குடும்ப நண்பர்கள். வரலட்சுமி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் நல்ல தன்னம்பிக்கையான பெண். எனது தவறுகளைசுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்துவார். எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் அவர். எனது நெருங்கிய தோழி. நாங்கள் நல்ல நண்பர்கள். எனது குறிக்கோள் நடிகர் சங்க கட்டிடம் கட்டிடுவது தான். நல்லது, கெட்டது என அனைத்தையும் வரலட்சுமியுடன் பகிர்ந்து கொள்வேன்.“என்றார் விஷால்.

Spread the love