தமிழ் இளையோர்கள் இராணுவத்தில் இணையக் கூடாது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட பின்னரே அது தொடர்பில் பரிசீலிக்க முடியும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடக்கு இளையோர் இராணுவத்தில் சேர வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி கூறியிருந்தார். அது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்
தற்போது இலங்கை இராணுவம் சிங்கள இராணுவம் போல உள்ளது. முதலில் இனவிகிதாசார அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். படையினருடன் துணைப்படை போல தமிழ் இளையோர் இணைந்து கொள்வது என்பது, எமது விடுதலைப் போராட்டத்துக்கும், அதற்காக உயிர்துறந்தவர்களுக்கும் நாங்கள் செய்யும் துரோகமாகவே அமையும்.
எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு எமது மண்ணிலே நாங்களே எங்களை ஆள்வதற்குத் தீர்வு எட்டப்பட்ட பின்னர், சிங்களப் படை என்பது இலங்கைப் படை என்று மாற்றப்பட்ட பின்னர் இனவிகிதாகார அடிப்படை ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதன்பின்னர் படையில் இணைந்துகொள்ள முடியுமே தவிர, இராணுவத் தளபதியுடைய அல்லது எவருடைய ஆசை வார்த்தைகளையும் நம்பி அதில் இணையக்கூடாது.
எமது கௌரவம் துணைப்படையில் இணைந்தால் பாதிக்காது என்று உறுதிப்படுத்தப்படும்போதுதான் இணையவேண்டும். அவசரப்பட்டு குழிகளிலே விழவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.“
ஆயுதங்களால் வெற்றிகொண்ட “பனங்காட்டை” புத்திக்கூர்மையால் தமதாக்கும்படையினர்…