இந்தோனேசியாவில் உள்ள 3 தேவாலயங்களில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை காலை இந்தத் தாக்குhல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தோனேசியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சுரபயா என்ற பகுதியில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக வந்த தீவிரவாதிகள், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று தேவாலயங்களிலும் ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்துள்ளதாகவும் இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இந்த பகுதியில்தான் அதிக தேவாலயங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.