குழந்தைகள் கடத்தப்பட்டால் மாயம் என்று வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை டி.கே.ராஜேந்திரன் மாநகர காவல்துறை ஆணையாளர்கள் , ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் காவல்துறை அத்தியட்சர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
குழந்தை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டால் கடத்தல் என வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யக்கூடாது எனவும் தெரிவித்திருந்தனர்
நீதிபதிகள் வழங்கிய உத்தரவை அரசு சட்டத்தரணி தமிழக காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்திருந்ததையடுத்து இவ்வாறு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இனிமேல் காணாமல் போன சம்பவங்களின்போது முறைப்பாடு செய்யப்பட்டால் ஆள் கடத்தல் என வழக்குப்பதிவு செய்யவேண்டும் என அவர் அதில் அறிவுறுத்தி உள்ளார்.