தெலுங்கானா மாநிலம் கைதராபாத் நகரில் உள்ள சிறார் சீர்திருத்த பாடசாலையில் இருந்து தப்பிச்சென்ற 15 சிறுவர்களை தேடும் பணியில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சைதாபாத் பகுதியில் மாநில அரசால் நடத்தப்படும் சிறார் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 18 வயதிற்கு உள்ள கீழ் தவறு செய்த சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காப்பகத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச்சென்றது சிசிடிவி-யில் பதிவானது. 14-17 வயதுடைய அந்த சிறுவர்கள் இரவில் வெண்டிலேட்டர் துளை வழியாக வெளியே வந்து சுவரில் ஏறி குதித்து சென்றனர். இவர்கள் ஏராளமான குற்றங்களை செய்துள்ளனர். அதில் ஒரு சிறுவன் தப்பிக்க முயன்ற போது காவற்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, காப்பகத்தின் மேற்பார்வையாளர் மற்றும் இயக்குனர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவற்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவை வைத்து சிறுவர்களை தேடும் பணியில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.