125
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. உலக சந்தையின் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும், பொது மக்களுக்கு அதிகளவில் சலுகை வழங்குவதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love