Home இலங்கைபஸ் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளது..

பஸ் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


பஸ் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் வாரத்தில் அல்லது அதற்கு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் பஸ் கட்டண உயர்வு தொடர்பிலான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கான விலை உயர்வுக்கு நிகராக பஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட வேண்டுமென பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பஸ் கட்டணங்களை 20 வீதமாக உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணம் 10 ரூபாவிலிருந்து 15 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்க நேரிடும் என பஸ் உரிமையாளர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More