எமது தேசிய கிரிக்கட் அணியை பலப்படுத்தவேண்டுமானால் வெளிமாவட்ட மட்ட கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவைப்பாடு உள்ளது என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற (13-05-2018) 25ஆவது டியவவடந ழக புழடன என்ற தொனிப்பொருளிலான ஒருநாள் கிரிக்கட்போட்டியில் தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பாடசாலை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டிகளில் இருந்தே தேசிய கிரிக்கட் வீரர்கள் உருவாகின்றனர். ஆனால் தற்போது துரதிஷ்டவசமாக கிரிக்கட் விளையாட்டின் தரம் குறைந்துள்ளது.
எமக்கு தெரியும் திறைமையான இளம் கிரிக்கட் வீரர்கள் வருவது வெளியிலிருந்தேயாகும். அது வடக்குகிழக்கு ஆகலாம் அல்லது தெற்குமேற்கு ஆகலாம். எனக்கு ஞாபகம் உள்ளது 1991ஆம் ஆண்டு இலங்கை அணியின் தலைவராக என்னை தெரிவுசெய்தார்கள். அதன் பின் நான் பாடசாலை கிரிக்கட் போட்டிகளை அவதானமாக பார்ப்பபேன்.
96ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியில் எமது அணியில் 70வீதமான வீரர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களேயாவர். கொழும்பு கிரிக்கட்டர்கள் அல்ல. இதனால் தான் நான் கிரிக்கட் சபைக்கு தெரிவிப்பது வெளிமாவட்ட கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்யுங்கள் என்று. இன்று நான் வெற்றி அடைந்த அணியை வாழ்த்துவதோடு தோல்வி அடைந்த அணியின் உத்துழைப்புக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன் என்றார் .
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா கல்லூரி மற்றும் மட்டக்களப்பூ சிவாநந்தா கல்லூரிக்குமிடையிலான கிரிக்கட் போட்டியில் முதலில் நபயணச்சுழற்சியில் வென்ற மட்டகளப்பூ சிவாநந்தா கல்லூ 49ஓவர்களில் 156 ஓட்டங்களைப் பெற்றது.
எனினும் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா கல்லூரி 48 ஓவர்களில் நான்கு விக்கட் இழப்புகளில் மட்டக்களப்பூ சிவாநந்த கல்லூரியை வீழ்த்தியது