152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பாளராக பிரதிக் காவல்துறை மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதுவரை காலமும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தலைவராக கடமையாற்றி வந்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி வித்தியாலங்கார ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். மஹிந்த ஏக்கநாயக்கவும் இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love