இந்தோனேசிய துறைமுக நகரமான சுராபாவில் நேற்றையதினம் சிறு குழந்தைகளுடன் குடும்பம் ஒன்று தற்கொலை குண்டுவெடிப்பை நடத்தியுள்ளது. ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு வலைப்பினலே இந்தத் தாக்குதல்களுக்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அந்த குடும்பத்தினர், காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த சோதனைச்சாவடிக்கு அருகில் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் நான்கு அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதலை ஒரு தம்பதிகள் நடத்தியமையை சி.சி.டி.வி காட்சிகள் காட்டுகின்றன எனவும் எட்டு வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கெனவே கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இதேபோன்று ஒரு குடும்பம், தேவாலயங்களில் தற்கொலை தாக்குதல் நடத்திய நிலையில் இரண்டாவது நாளாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.