Home இலங்கைஇரு நாட்டு பாதுகாப்பு குறித்து இந்திய ராணுவ தளபதி பிரதமருடன் கலந்துரையாடல்

இரு நாட்டு பாதுகாப்பு குறித்து இந்திய ராணுவ தளபதி பிரதமருடன் கலந்துரையாடல்

by admin


நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளார். இந்திய ராணுவ தளபதியாக அவர் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு முதல் தடவையாக நேற்றையதினம் வந்துள்ள அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன இரு நாட்டு பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார்

அதன்பின் இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கா, கடற்படை தளபதி எஸ்.எஸ்.ரணசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரட்ன ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார். இந்தநிலையில் இன்றையதினம் கண்டியில் இந்திய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு ஆய்வுகூடத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் கண்டி மற்றும் திரிகோணமலை பகுதிகளின் பிராந்திய ராணுவ தளபதிகளையும் அவர் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More