இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேரைக் காணசவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை மாலை கிழக்கு கோதாவரி மாவட்டம் வடபள்ளியிலிருந்து 40 பேருடன் பயணித்த குறித்த படகு கோதாவரி ஆற்றில் சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளதாகவும் இதன் காரணமாக படகு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
படகில் பயணித்த சிலர் பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், பிறரை மீட்கும் பணி நடைபெற்று வருவமாகவும் இதுவரை 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – சுமார் 30 பேரை காணவில்லை
May 15, 2018 @ 18:09
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கிழக்கு கோதாவரி மாவட்டம் வடபள்ளியிலிருந்து 40 பேருடன் பயணித்த குறித்த படகு கோதாவரி ஆற்றில் சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளதாகவும் இதன் காரணமாக படகு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
படகில் பயணித்த 10 பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், ஏனையோரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வீதிப்போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால், கடந்த ஆறு தசாப்தங்களாக இம்மக்கள் படகு போக்குவரத்தைதான் நம்பி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது