குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன. பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் மெக்டொனாவ், ஜொனதன் அஸ்வோர்த், பெரி கார்டியன், பெபியன் ஹமில்டன் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றின் Boothroyd Room ல் இன்றைய தினம் இடம்பெற உள்ள ஒன்பதாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைகள் உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் கருத்துரைக்க உள்ளனர். பிரித்தானிய தொழிற் கட்சி எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக தொழிற் கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் சென் கந்தையா தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.