முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்கள் எமது மக்களும் அவர்களின் பிள்ளைகளுமே என்றும் அவர்களை நினைவு கூர்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும் சுகாதார அமைச்சரும் அரசாங்க அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்கள் விடுதலை முன்னணியினர் அன்று ஆயுதம் ஏந்திய தரப்பினரே. ஆனால் அவர்கள் இன்று உயிரிழந்தவர்களை நினைவு கூரவில்லையா? ஜேவிபினருக்கு இந்த நாட்டில் அதற்கான அனுமதி காணப்படுமாகவிருந்தால் ஏன் தமிழ் மக்களுக்கு அவர்களின் உறவுகளை நினைவு கூர அனுமதி மறுக்கப்படுகிறது. நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் . உண்மையில் உங்களிடம் தற்பொது எழுந்துள்ள பிரச்சினை நினைவு கூரல் என்பது தொடர்பிலா அல்லது தமிழ் மக்கள் அதனை செய்கின்றனர் என்று பொறுத்துக்கொள்ள முடியாத மனப்பாங்கிலா? இந்த கேள்வியினை கேட்கின்றீர்கள்? என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.
மற்றொரு சிங்கள ஊடவியலாளர் அமைச்சரைப் பார்த்து இறுதிக்கட்ட யுத்தத்தில் தீவிரவாதிகளே உயிரிழந்தனர் . பொதுமக்கள் உயிரிழக்கவில்லையே என வினவினார்.
கடும் சினத்துடன் பதிலளித்த ராஜித்த சேனாரத்ன ஏன் உங்களுக்கு தெரியாதா? அல்லது எனக்குதான் தெரியாதா? அனைவரும் அறித்த உண்மையை மீண்டும் கேள்வியாக எழுப்ப வேண்டாம். மனிதாபிமானத்துடன் செயற்பட முயற்சி செய்யுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.