குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மோசடியான ஆவணம் என பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். சுந்தரம்பிள்ளை தற்போதும் உயிருடன் உள்ளார் அவரிடம் சத்திய கடதாசி வாங்குவோம் மற்றும் பிரதிகள் தான் அணைந்துள்ளோம் உண்மைப்பிரதிகள் அணைப்போம். என மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுபாஜினி கிஷோர் தெரிவித்துள்ளார்.
நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.
அதன் போது பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மனுவுடன் அணைக்கப்பட்டு உள்ள ஆவணங்களில் , சாவகச்சேரி பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் ஆவணம் பொய்யானது என தெரிவித்ததுடன் , அனைத்து ஆவணங்களும் அதன் உண்மை பிரதி இணைக்கப்படாமல் பிரதிகள் மாத்திரமே இணைக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து இருந்தார்.
அது தொடர்பில் மனு தாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர சாவகச்சேரி பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட ஆவணம் பொய்யானது என கூறியுள்ளார். அக்கால பகுதியில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுந்தரம்பிள்ளை என்பவர் தற்போது உயிருடன் தான் உள்ளார். அதனால் குறித்த ஆவணம் உண்மையானது என்பதனை நிரூபிக்கும் வகையில் அவரிடம் சத்திய கடதாசி வாங்க உள்ளோம்.
அத்துடன் மனுவுடன் அணைக்கப்பட்ட ஆவணங்களின் உண்மை பிரதிகள் எம் வசம் உள்ளன அவற்றினையும் மனுவுடன் இணைக்கவுள்ளோம் என தெரிவித்தார்.