ஈராக்கின் புனித நகரில் முதல் முறையாக ‘சமூக நீதி’ கோரும் 2 பெண் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஈராக்கில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் சார்பில் 2 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத ரீதியாக பாரம்பரியக் கட்சியான சதரிஸ்ட் கட்சியுடன் மதச்சார்பற்ற ஐசிபி கட்சி, கூட்டணி மேற்கொண்டுள்ளமை ஒரு அபாரமான கூட்டிணைவையும் வெற்றியையும் சாத்தியமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் சதரிஸ்ட் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1934இல் உருவாக்கப்பட்ட ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி முதல்முiறாயக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.முஸ்லீம் மத நம்பிக்கையாளர்களின் புனித நகரங்களில் ஒன்றான நஜாபில் , சுகாப் அல் கதீப் என்பவர் வெற்றிபெற்றுள்ளார். கதீப் ஒரு ஆசிரியை வறுமைக்கு எதிரான சமூகப் போராளி, பெண்ணுரிமை போராளியுமாவார். அதேபோன்று திகரில் கட்சி வேட்பாளரான ஹைப அல் அமீனும் வெற்றி பெற்றுள்ளார்.
முக்தாத அல் சபரின் தலைமையிலான அமெரிக்க எதிர்ப்பு கூட்டணி ஈராக் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள போதும் சதரிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை அரசமைக்க அனுமதிக்க முடியாது என்பது ஈரானின் நிலைபாடாக உள்ளது. ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி மத்திய கிழக்கு பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உற்சாகமளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் ஏராளமான ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தகர்க்கப்பட்ட நிலையில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
2008இல் முன்னாள் அமெரக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்சுக்கு எதிராக காலணி வீசிய பெண் பத்திரிகையாளர் மும்தாஸ அல் செய்தியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது