அதிர்ச்சியூட்டும் தோல்விகளுக்கு மத்தியிலும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை சாதனை லாபம் படைத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை கடந்த ஆண்டு பெற்ற இலா பங்களை வெளியிட்டுள்ள நிலையில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை இ நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இலாபத்திற்கும் இலங்கை அணி 2017-ல் அடைந்த மாபெரும் தோல்விகளுக்கும் சம்பந்தமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் வருமானம் முன்னைய ஆண்டிலும் பார்க்க கடந்த வருடம் இருமடங்காக அதிகரித்துள்ளதுடன் நிகர லாபம் 33 மடங்கு அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தமது உத்திபூர்வமான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சாதுரியமான நிதி நிர்வாகத்தினால் விளைந்ததாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ள போதும் இந்த லாபம் அதிகரித்தது பற்றி விரிவாக எதையும் கூறவில்லை என்பதும் நோக்கத்தக்கது
2017-ல் சிம்பாப்வே, இந்தியா, பங்களாதேஸ் தொடர்கள் இலங்கையில் நடைபெற்றதும் இந்த லாப அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என சில தரப்புகள் தெரிவித்துள்ளன.