குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகளுக்கான செலவுகளை ஈடு செய்வதற்கே தற்பொழுது பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய சலுகைகள் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நட்டத்தை ஈடு செய்யவே எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேவைகளில் விலை அதிகரிப்பு பதிவாகி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர், மண்ணெண்ணை விலை இரண்டு மடங்கை விடவும் உயர்வடைந்துள்ளமை மீனவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்க ஆட்சிக் காலத்தை விடவும் தற்போது எரிபொருளின் விலைகள் குறைவாகவே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலை வெற்றி கொள்ளும் நோக்கில் எந்தவொரு அரசாங்கமும் பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் எனினும் அதில் மக்களுக்கு பயன் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.