170
வெளிநாடுகளுக்கு பயணிக்க இருப்பவர்கள் பயண நேரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரும் வரையில் இவ்வாறு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love