அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் முன்னாள் மருத்துவர் லாரி நாசரால் ( Larry Nassar) பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக பெண்களுக்கு மிக்சிகன் பல்கலைக்கழகம் 500 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் வைத்தியரான 54 வயதான லாரி நாசர் (Larry Nassar ) அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியராக செயற்பட்டு இவர் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துள்ளார். இந்தநிலையில் 332 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 175 வருடம், சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் மிக்சிகன் பல்கலைக்கழக நிர்வாகம் லாரி நாசரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.