டெஸ்ட் போட்டியின்போது நாணயச்சுழற்சி மேற்கொள்வதனை கைவிடுவது குறித்து ஐசிசி மீண்டும் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் முதலில் விளையாட்டினை ஆரம்பிப்கது என்பது நாணயச்சுழற்சி மூலம் தீர்மானிக்கப்படும்.
வுpளையாட்டு இடம்பெறும் நாடுகள் பிட்ச் உள்ளிட்ட சாதக சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு விளையாட்டினை தீர்மானிப்பதனால் எதிரணியின் கைகள் கட்டப்படுகின்றன எனவும் இதனால் ஒருதலைபட்சமான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று ஒருதலைபட்சமான முடிவுகள் ஏற்படுகின்றன எனவும் ஐசிசி கருதுகிறது.
எனவே நாயணச்சுழற்சி முறையை விடுத்து உள்நாட்டு அணி அல்லாமல் வெளியிலிருந்து வந்த அணியின் தலைவரே நேரடியாக களத்தடுப்பினையா அல்லது துடுப்பாட்டத்தினையா முதலில் மேற்கொள்வது என்பதனை தீர்மானிக்கும் சந்தாப்பம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றது.
இதனை முதலில் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் வரும் போட்டிகளுக்கு நடைமறைப்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 2019-ல் இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் இதனை பரிசோதனை செய்யப்போவதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.