205
கர்நாடகாவில் பாஜக சார்பில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை ‘ஜனநாயக பாதுகாப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை காக்க நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு கோரிக்கை விடுத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாநில ஆளுநர்களிடம் மனு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love