குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜே.வி.பி போராளிகளை தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் ஒப்பீடு செய்தமைக்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜே.வி.பி கட்சி ஓர் அரசியல் கட்சி எனவும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஓர் கட்சியெனவும் கட்சியின் உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். 1981ம் ஆண்டு போலியான குற்றச்சாட்டின் அடிப்படையில் தமது கட்சி தடை செய்யப்பட்டதாகவும் 1970ம் ஆண்டு முதல் தமது கட்சி அரசியலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களின் உரிமைகளுக்காக போராடியதில்லை எனவும் பிமல் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.