கியூபாவின் தலைநகரான ஹவானாவிலுள்ள மார்டி சர்வதேச விமான நிலையம் அருகே போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என கியூபாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உயிர் தப்பித்த மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 110 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் கியூபாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹொல்கூன் என்ற நகரத்திற்கு புறப்பட்ட விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வுpமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோனோர் கியூபா நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், ஐந்து பேர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வுpபத்துக்குள்ளான விமானம் 1979ல் உருவாக்கப்பட்டது எனவும் கடந்த நவம்பரில் பரிசோதிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் மேலே கிளம்பிய போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாகவே விமானம் கீழே விழுந் து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.