178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சீரற்ற காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், மத்திய, சபரகமுவ, தென் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் கடுமையான மழையுடன் இடி மின்னல் தாக்குதல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெலிகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்குதல்களில் இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு சகோதரர்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Spread the love