Home இந்தியாஜூன் 11 முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

ஜூன் 11 முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

by admin

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூன் 11-ம்திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றையதினத் திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேற்படி கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் முள்வேலி அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு மனித உரிமைகளை மீறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் கோட்டை முற்றுகை போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11ம் திகதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது எனவும், அன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More