ரஸ்யா உருவாக்கியுள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. 144 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலம் கொண்ட இந்த மிதக்கும் அணுமின் நிலையமானது முற்றிலும் பனி படர்ந்த ஆர்டிக் வளைவில் உள்ள பெவெக் என்ற நகரை அடுத்த வருட இறுதிக்குள் சென்றடையும் எனவும் இதன்மூலம் அங்குள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கும் இதன் மூலம் மின்சாரம் கிடைக்கும் எனவும் இது செயற்பாட்டுக்கு வந்துள்ளதால் ரஸ்யாவில் ஏற்கனவே உள்ள இரண்டு பழைய மின் நிலையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விதிமுறைகளின் படி அணுமின் நிலையம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுனாமி போன்ற இயற்கை பேரிடரை இது தாங்கும் எனவும் கப்பலை தயாரித்த ரஸ்ய அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.