குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை, ரத்தினபுரி, குருணாகல், நுவரெலியா, பதுளை, காலி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் கடந்த இருபத்து நான்கு மணித்தியாலங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறிச் செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மண்சரிவு தொடர்பான அறிவுகள் தென்பட்டால் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.