உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படும் காலநிலை மாற்றங்களுக்கு மட்டுமன்றி மூளை நோய்களுக்கும் வளி மாசடைதல் ஏதுவாக அமைகின்றது என புதிய ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. வளி அதிகளவில் மாசடையும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் மூளை செயற்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வளி மாசடைதலுக்கும் மூளையின் செயற் திறனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.வளி மாசடையும் பிரதேசங்களில் வாழும் 51 வயதுக்கு மேற்பட்டவர்களின் மூளை செயற்பாட்டை விடவும், வளி அதிகளவில் மாசடையாத பிரதேங்களில் வாழும் 51 வயதுக்கு மேற்பட்டவர்களின் மூளை செயற்பாடு வினைத்திறனாகக் காணப்படுகின்றது.
டீசல் இயந்திரங்களினால் வளியில் கலக்கப்படும் மாசுப் பொருட்கள் கற்றல் திறமைகளை பாதிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. மூளைச் செயற்பாட்டிற்கும் வளி மாசடைதலுக்கும் தொடர்பு இருப்பதாக பொஸ்டன் ஹவார்ட் மருத்துவக் கல்லூரியின் டொக்ட மெலின்டா பவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களினால் வெளியிடப்படும் நச்சு வாயுக்களே அதிகளவில் இவ்வாறு சுற்றுச் சுழலை மாசடையச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வளி மாசடைவதனால் வயது முதிர்ந்தவர்களின் மூளைச் செயற்பாடுகளுக்கு கூடுதல் பாதக விளைவுகள் ஏற்படும் என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….