கேரள மாநிலத்தை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இந்த உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இந்த நிபா வைரஸ் தாக்குதல் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பரவலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு தாதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
வெளவால்களால் பரவும் இந்த நிபா வைரஸ், மனிதர்கள் மற்றும் விலங்குகளை தாக்குவதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான மூளைக்காய்ச்சல் மற்றும் மூளைச்சாவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது . இந்தநிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வல்லுநர் குழு ஒன்று இன்று கோழிக்கோடு சென்று , நோயாளிகளை பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.