புலிகளை நினைவேந்திய வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் சர்வதேசத்திற்கு முன்வைத்த கருத்தினை ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதிக்கின்றனரா? வடக்கில் புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை, நினைவுத்தூபி அமைத்தமை என்பன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெறுகின்றனவா என்பதை உடனடியாக நாட்டு மக்களுக்கு கூற வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியுள்ளனர்.
வடக்கின் நிலைமைகளை எந்த வகையிலேனும் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே ஜனாதிபதி உடனடியாக வடமாகாண சபையை கலைத்து நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரிவினையை தூண்டும் விக்கினேஸ்வரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
வடக்கில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற நினைவேந்தல் நிழல்வுகள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்கள் குறித்து தமது நிலைப்பாட்டினை கூறும் போதே முன்னாள் அமைச்சர்களும், கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்த்தர்களுமான ஜி.எல் பீரிஸ், மற்றும் பந்துளகுணவர்த்தன ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.