182
பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் மறைந்ந பாலகுமாரனுக்கு தனது அஞ்சலியையும் அவர் செலுத்தினார்.
பிரபல தமிழ் புனைகதை வெகுசன எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த 15ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் இலக்கியவாதிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, வெளியூரில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்ததால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனால் பாலகுமாரன் இறுதிச்சடங்குகளில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையிலேயே, சென்னை திரும்பிய கமலஹாசன் இன்று பாலகுமாரன் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மனைவி, மகன் உள்ளிட்டோரிடம் அவர் தனது ஆறுதலைத் தெரிவித்தார்.
Spread the love