குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியில் 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இந்நாட்டு ஜனாதிபதி ரையிப் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதிப்புபுரட்சியில் ஈடுபட்;டமைக்காகவே இவ்வாறு ஆயுள்தண்டனையை துருக்கி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவ சதிப் புரட்சி முயற்சியுடன் தொடர்புபட்டதாகத் தெரிவித்து ஏற்கனவே 23 ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த சதிப்புரட்சி முயற்சியுடன் தொடர்புடைய 50, 000 பேர் கைது செய்யப்பட்டதுடன், 150,000 பேரின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இராணுவ உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது