Home உலகம்சீனாவுக்கு எதிராக தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிலிப்பைன்ஸ்

சீனாவுக்கு எதிராக தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிலிப்பைன்ஸ்

by admin


தென் சீனக்கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சோதனை செய்தமை தொடர்பில் சீனாவுக்கு எதிராக தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிலிப்பைன்ஸ்; தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

அதேவேளை தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக உரிமை கோரும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டு வீச்சு விமானம் உள்பட பல்வேறு போர் விமானங்களை தென் சீனக்கடல் பகுதியில் தரை இறக்கி சோதனையில் ஈடுபட்டமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையிலேயே இதற்காக சீனா மீது தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என பிலிப்பைன்ஸ் அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரித்து உள்ளது.

நாட்டின் இறையாண்மைக்கு சொந்தமான பிரதேசங்கள் மற்றும் பகுதிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பிலிப்பைன்ஸ் பாதுகாக்கும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More