164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கையின் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நாளை புதன்கிழமை மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார்.
மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்விற்கு அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இனவாதத்திற்கும், போருக்கும் எதிரான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Spread the love