155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் சொத்துக்களை கொள்ளையிடும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை காவல்துறையினர் 24 மணித்தியாலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
Spread the love