181
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட கார்க்குண்டு தாக்குதலில் சிரிய ராணுவத்தினர் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையின் போது கூட்டுப்படையினர் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து கடைசி நகரையும் கைப்பற்றியிருந்தனர்
இந்நிலையில், சிரியாவின் படியா பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவத்தினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் கார்க்குண்டு வெடிப்பு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
Spread the love