144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் பொருளாதாரக் கொள்கைகளையே இந்த அரசாங்கமும் பின்பற்றி வருவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் கோதபாய ராஜபக்ஸ அண்மையில் வெளியிட்ட கருத்து வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவும் இந்தியாவும் வளர்ந்து வரும் உலகப் பொருளாதார மையங்களாக உருவாகி வருவதாக கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ள கருத்து சரியானதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கமும் இந்த கொள்கைகளையே பின்பற்றி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love