ஆசிரியர்கள் பிள்ளைகளை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாடசாலை ஆசிரியர்களினால் மாணவ மாணவியருக்கு நேரும் அநீதிகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் மூலம் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த மோசமான நிலைமை குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். பிங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆசிரியர்கள் பிரம்பை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறைக் கூடங்களில் தண்டனை அனுபவிக்க நேரிடும் என இதற்கு முன்னதாக ஓர் கூட்டமொன்றில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.