புலிகளின் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட இவர் கோபி – அப்பனுடன் தொடர்புபட்டவரா? – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் அகழ்வு விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டு முற்றத்தில் அகழ்வுப் பணிகளை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்
இன்று 23-05-2018 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர் தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு பொலிசார், , நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் விமானப்படையினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு சென்ற விமானப்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் தர்மபுரம் பொலிசார், , நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது சுமார் ஆறு அடி ஆழத்தில் பொலித்தீன் கொண்டு சுற்றப்பட்டு பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் கைத்துப்பாக்கி தொட்டா ஐந்து என்பன மீட்க்கப்பட்டுள்ளது இவை பாவிக்கக்கூடிய நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தீபன் என்கின்ற முனியாண்டிராஜா ரஞ்சன் முன்னர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில்உயர் தரப்புக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் எனவும் மீள் குடியேற்றத்தின் பின்னர் பாரிய அளவில் பேசப்பட்ட கோபி அப்பன் அவர்களின் பிரச்சனையில் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பாததுகாப்பு தரப்பினரால் கைதுசெய்ய முறைப்பட்ட பொழுது நாட்டை விட்டு தப்பிச் சென்று புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.