குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் நாட்டில் அழிவுகள் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளினால் இயற்கை அன்னை அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தங்க குதிரைகள், லம்போகினி கார்கள் என பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை மைத்திரிபால சிறிசேன செய்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இறுதியில் ஜனாதிபதியின் பிரதம அதிகாரியே லஞ்ச ஊழல் மோசடியில் சிக்கி கைதாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜித சேனாரட்ன நாட்டின் படைவீரர்களுக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.