குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலையினால் நேற்று மாலை வரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 14 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 27000 குடும்பங்;களின் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 41000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினமும் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.