140
ரத்மலானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனஞ்சய டி.சில்வாவின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு சம்பவத்தில் 63 வயதுடைய கே. ரஞ்சன டி.சில்வா என்பவேர உயிரிழந்துள்ளார் எனவும், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்,காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட ரஞ்சன டி.சில்வா தெஹிவளை, கல்கிஸை மாநகர உறுப்பினராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love