163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கையில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொருளாதார அதிகாரி Yang Zuoyuan, இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை – சீன அபிவிருத்தித் திட்டங்களில் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்கு அதிகளவில் சீனப் பிரஜைகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும், சீனப் பிரஜைகளை கடமையில் அமர்த்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கட்டாயம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love