குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலேசிய விமானம் ரஸ்ய ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று உக்ரேய்னில் வைத்து கடந்த 2014ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.
மேற்கு ரஸ்யாவிலிருந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக டச்சு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அம்ஸ்டமிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணம் செய்த போயிங் 777 ரக விமானமே சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. உக்ரேய்ன் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்ருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,தாம் இந்த தாக்குதலை நடத்தவில்லை எனவும் ரஸ்யா தெரிவித்திருந்தது
எனினும், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணை ஓர் ரஸ்ய உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது. ரஸ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஏவுகணையொன்று ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதனை 100 வீதம் உறுதி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.