குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வங்கியின் சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஹற்றன் நஷனல் வங்கி வட்டாரத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பில் ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த வங்கி வட்டார தகவல்கள் மூலம் மேலும் அறியமுடிந்ததாவது ,
முழுமையான தகவல்களின் பின் புலத்தினை நோக்கினால் இதில் உள்ள சிக்கல் புரியும். தெற்கில் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் வங்கி பங்கு கொள்வதை எமது எதிர்ப்பால் நிறுத்தினோம்.அவ்வேளையில் இது தொடர்பான சுற்றறிக்கை, சமூக ஊடகக் கொள்கை என்பவற்றை வங்கி அறிமுகப் படுத்தியது.
அதனடிப்படையில், வங்கிச் சீருடையுடன் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் உண்டு. இதனைக் காரணம் காட்டியே நடவடிக்கை எடுக்க முகாமைத்துவம் வற்புறுத்தப்பட்டது. இது சம்பளத்துடன் கூடிய இடை நிறுத்தம். வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழி முறையுடன் தான் ஆரம்பிக்க வேண்டும்.
சமூக ஊடகக் கொள்கைகளை மீறியது தான் குற்றச் சாட்டு. எனவே தண்டனை மிகச் சிறியதாக தான் இருக்கும் என அறிய முடிகிறது என கருதப்படுகின்றது