குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் உயர் தர கலைபிரிவு மாணவர்களின் ஏற்பட்டில் உயர்தரத்தில் சித்திரத்தை பிரதான பாடமாக கற்கும் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை பாடசாலையில் ஓவியக்கண்காட்சி இடம் பெற்றது.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆசிரியர்களான அன்ரனி தாஸ் காயத்திரி மற்றும் சுமதி ஜெயதாசன் ஆகியோரது ஒத்துழைப்புடன் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உயர் தர கலை பிரிவு மாணவர்களான ஜே.கிளின்டன் டலிமா, வி.என்.கிறிசாந்தன், அந்தோன் கிசான், என்.அஸ்மீன், ஜி.ஜெருசன், என்.பவித்திரன் ஆகிய ஆறு மாணவர்களின் சுய ஆக்கங்கள் குறித்த ஓவியக்கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. குறித்த கண்காட்சியில் சமூக வாழ்வியலை மையமாகக் கொண்டு சுமார் 100 ற்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பிரதான மன்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை(25) காலை 11.30 மணியளவில் ஆரம்பமான குறித்த கண்காட்சியினை மன்னார் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்டியன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது மன்னார் வலய கல்வி பணிமனையின் உதவி உடற்கல்வி பொறுப்பதிகாரி பி.எம்.எம்.சில்வா மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் கலந்துகொண்டதோடு,பாடசாலை மாணவர்களும் குறித்த ஓவியக்கண்காட்சியினை பார்த்து மகிழ்தமை குறிப்பிடத்தக்கது.